எல்லோருக்கும் இலவசம்’ அறிவிப்பு விரைவில் வருது... கொரோனா தடுப்பூசிக்கு 51,642 கோடி ஒதுக்கீடு?: ஒவ்வொரு நபருக்கும் 550 வரை செலவு செய்ய மதிப்பீடு தயார்


 கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசின் சார்பில் 51,642 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு நபருக்கும் தலா 550 வரை செலவு செய்ய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டறிதல் விஷயத்தில் மூன்று தடுப்பூசிகள்  மேம்பட்ட  3வது கட்ட சோதனையில் உள்ளன. ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா  தடுப்பூசி மூலம் இந்தியாவில் மனித சோதனைகள்  நடைபெற்று வருகிறது. புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனமும் நாட்டில் சோதனைகளை  நடத்தி வருகிறது. டாக்டர்  ரெட்டியின் ஆய்வகங்கள் லிமிடெட் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம்  ஆகியவை ரஷ்ய தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளுக்கு புதிய ஒப்புதல்  பெற்றுள்ளன. தடுப்பூசிகள் மார்ச் மாதம் வாக்கில் மக்களுக்கு  கிடைக்கும்  என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

Comments

Popular posts from this blog

இல்லாத ஊசிக்கு பொல்லாத வாக்குறுதிகள்: பாஜகவின் தேர்தல் அறிக்கை குறித்து நடிகர் கமல் விமர்சனம்

சிலம்பரசனின் மட்டைஆட்டம்

சிவனின் ‘நெற்றிக்கண்’